Sunday, May 25, 2014

Blogpostஎஸ்.எஸ்.எல்.ஸி தேர்வு முடிவு, - செய்தியும் புலம்பலும் .


Image Source: Dinamani

முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சையில் தேர்ச்சி அடைந்தவர்கள் பட்டியல் வெளியிட மறுநாள் தினசரி பத்திரிக்கைகளில் கூடுதல் பக்கங்கள் இணைப்பதுண்டு.. முதல் பக்கத்தில் "ஒரு பகுதியை" (மட்டுமே) முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளை பற்றி செய்திகளால் நிரப்பி இருப்பார்கள்..
ஆனால் இப்பெல்லாம் ,
முதல் இடங்களை பிடித்த மாணவமாணவியர் பெயர் பட்டியலுக்கே கூடுதல் பக்கங்கள் இணைக்க வேண்டிய நிலைக்கு ஆகிடுச்சு..

பத்தொன்பது மாணவர்கள் முதலிடம் என்றும், 125 மாணவமாணவியர் இரண்டாம் இடம் என்றும், 321 மாணவ மாணவியர்கள் மூன்றாம் இடம் என்றும் அறிந்தேன்.. இவர்களில்லாம்ல் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்கள், பாட வாரி முதலிடம் பிடித்தவர்கள் என அனைவரையும் கணக்கிட்டால் சில லட்சங்களுக்கு போகும் என்பதலில் எந்த சந்தேகமும் வேண்டாம்..

வெற்றிப் பெற்றவர்களுக்கு பாராட்டுக்களையும், வெற்றியை விடா முயற்ச்சியுடன் விரட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இந்த சமையத்தில்

கல்வியின் தரம் உயர்ந்து விட்டதா என்று பார்த்தால் , முதல் இடம் பிடித்தவர்கள் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளிக்கும் பேட்டிகளிலே தெரிகிறது.. நிச்சயம் தரம் உயர்ந்த அறிகுறி இல்லை.. பதினைந்து-இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முதலிடம் பிடித்த மாணவமாணவியர் என்ன சொன்னார்களோ அதே தான் இப்பவும் வெற்றிக்கு காரணமாக ஒப்புவித்துக் கொண்டிக்கிறார்கள்.. தங்களை "பெற்றவர்கள், ஆசிரியர், தலைமை ஆசிரியர், பிரின்சிப்பால் மற்றும் சிலர்களின் கடின உழைப்பு" என்றால்லாம் சொல்வது தான் வாடிக்கை....

'குறிக்கோளாக என்ன பண்ணுவீங்க?"' என்ற கேள்விக்கான பதிலிலாவது மாற்றம் இருக்குமா என்றால் அதுவும் , மனப்பாடம் செய்த வரிகளே...

"மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.. "(கடந்த இருவது முப்பது வருடங்களாக முதலிடம் பிடித்தவர்கள் அனைவரும் மருத்துவர் ஆகி சேவை செய்கிறார்கள் என்றால் இன்று தரமான மருத்துவம் பலருக்கு எட்டா கனியாக இருந்திருக்காது.. ) இதே "சேவை செய்வோம்" என்று மனப்பாடம் செய்த வரிகளை ஒப்புவிதவர்கள் தான், ஒருவருடம் கிராம புறங்களில் பனி புரிந்தால் மட்டுமே மருத்துவம் முழுமை பெரும் என்ற அரசின் ஆணையை ஏற்க மறுத்து சாலை இறங்கி போராட்டம் பண்ணவர்கள்.
சரி அது ஒரு புறமிருக்கக, இதே முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் தன்னை கடின உழைப்பால் முன்னுக்கு உயர்த்தி விட்ட ஆசிரியர்களாக வேண்டும் என்றோ, ஏதேனும் ஒரு துறை சார்ந்த படிப்பில் சிறந்து விளங்கி சாதனைகள் படைக்க வேண்டும் என்றோ, புதுப் படைப்புகள் உருவாக்க வேண்டும் என்றோ எவரேனும் சொல்லுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இன்றும் எதிர்ப்பார்ப்பாகவே இருக்கிறது..

தன் அரசாங்கத்தில் க்ளர்க்க் மற்றும் உதவியாளர் பதவிகளுக்கு போதுமான அளவிற்கே அறிவு கொடுக்கும் கல்வி முறையை ஆங்கிலேயர் உருவாக்கி இருந்தனர், அரசாங்கம் பல மாறினாலும், இன்று வரை அந்த பழங்கால கல்வி முறையில் மட்டும் எந்த மாற்றமும் செய்யாமல் சிலபஸ் மட்டுமே மாற்றிக் கொண்டு, சமச்சீர், என்றும் சிபிஸ் சி என்றும் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்..

படித்தவர்கள் பாடம் நடத்துகின்றனர், படிக்காதவர்கள் பள்ளிக்கூடம் நடத்துகின்றனர் என்ற நிலை இருக்கும் வரை இதற்க்கு விடிவொன்றும் பிறப்பதற்கான வாய்ப்பில்லை என்றே தெரிகிறது..

விடியும் வரை காத்திருப்போம்..

Friday, April 2, 2010

Simple Science : டி ஜாடியின் மூடியில் சிறிய துவாரம் எதற்கு?

தினமும் நாம யோசிக்க நேரம் இல்லாத, கவனிக்காத நிறைய அறிவியல் நிகழ்வுகள், சுற்றியும் நடந்துகிட்டு தான் இருக்கு.. உதாரணம்> சுற்றுபுறத விட எப்பவும் நாம வாய்குள்ள வெப்பமா தான் இருக்கும், ஆனா உள்ளங்கைல காற்று ஊதினா அது குளுமையா உணர்வீங்க? எப்படி, சூடு அதிகமா இருக்கிற வாய்குள்ள போயிட்டு வெளிய வார காற்று குளிர்ச்சியா இருக்கும்? நு யோசிச்சி இருக்கீங்களா>? இந்த மாதிரி உங்கள கொலப்பி அதுக்குள்ள மீன் புடிகுறது தான் இந்த "Simple Science " தொடர்ச்சியின் நோக்கம்.
சுற்றி நடக்குற சின்ன சின்ன விஷயத்துக்கு அறிவியல் காரணம் கண்டு பிடிக்கலாம்நு தான்..
முயற்சி வெற்றி பெற எனக்கு நானே வாழ்த்து தெரிவிச்சிகிட்டு .............

விடையை பற்றி எழுதுவதற்கு முன் இந்த கேள்வி எதற்கு தேர்வு செய்தேன் என்று சிந்தித்தேன், அதற்கு காரணம் நான் எழுதி அனுப்பிய பல விடைகளில் இது ஒன்று மட்டும் தான் இது வரை "The Hindu " நாளிதழில் பிரசுரிக்க பட்டுள்ளது என்ன கொடுமை சார் இது?.. (லிங்க் கீழ கொடுத்துள்ளேன், last line).

பொதுவாக ஒரு மூடிய ஜாடி அல்லது குவளை யில் இருக்கும் திரவத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊற்றும் பொது , "போலுக்" "போலுக்" என்ற சத்தத்துடன் வெளியேறும், நாம ஊற்ற நெனைக்கும் பதித்ரத விட்டு கீழ சிந்துவதற்கு நெறைய வாய்ப்பு உண்டு.
இதற்க்கு காரணம், பாத்திரத்துக்கு உள்ளே இருக்கும் திரவத்தை வெளியேற்றும் பொது, அதன் வெற்றிடத்தை நிரப்புவதருக்கு சுற்றுப்புற காற்று திரவத்தில் உள்ளை விரையும், ஒரே சமையத்தில் உள்ளிருக்கும் திரவம் வெளியேயும் , வேலையே இருக்கும் காற்று உள்ளையும் போக முயில்வது தான்.

இந்த கஷ்டத்த குறைக்க தான் மூடி வச்ச ஜாடிக்கு மேல ஒரு சின்ன துவாரம் அல்லது ஓடை இருக்கும். அதா நாம சரியான திசைல இருக்கும் படிய மூடினோம் என்றால், காபியோ, டி'யோ , சுடு தண்ணியோ , ஏதுவ இருந்தாலும் கீழ சிந்தாமல் , ஜாடியில் இருந்து ஊற்ற முடியும். சரியான திசை என்பது, காற்று போகும் துவாரம் ஜாடியின் வாய்க்கு நேர் எதிர் திசையில் இருக்குமாறு ஜாடியின் மூடியை மூட வேண்டும். ஜாடியின் வாய் துவாரமும், காற்று போகும் துவாரமும் ஒரே திசைல இருக்கிற மாதிரி மூடிநீங்க, பழைய படி ஜாடிக்கு உள்ள இருக்கும் திரவம் ஊற்றும் போது ரெண்டு துவரதையும் அடைசிகிட்டு, காற்று உள்ளே போக விடாது.


தப்பான திசையில் மூடினோம் என்றால், எப்பவும் போல "போலுக் போலுக்கு"நு தான் உங்க கோபி ஊத்தும்.

சரியான திசைன்னு சொன்னத விளக்குறதுக்கு படம் கீழே....




அடுத்த "சிம்பிள் சயின்ஸ்" ல சந்திப்போம்..
வாய்குள்ள இருந்து வந்த காத்து எப்படி ஜில்லுநு இருக்குனு சொல்லவே இல்லையே?
விடைய அடுத்த பதிப்புல சொல்லறேன், அது வரைக்கும் நீங்களே யோசிச்சி கண்டுபிக்க முயற்சி பண்ணுங்க..
இது பெரிய ராக்கெட் தத்துவம் இல்லை, அதானலே நீங்க கண்டு பிடிச்சாலும் என்கிட்டே சொல்லுங்க சரியாய் தப்பான்னு நாம பேசி முடிவு பண்ணிக்கலாம்..



டிஸ்கி: என்னோட தமிழ் கொஞ்சம் தகிடதத்தோம் தான், நீங்க adjust panni போறதுக்கு வேண்டுகோள், அத விட்டு "ஷேம் ஷேம், பப்பி ஷேம்நு யாராச்சு kalaaicheenga.....?
Here is the link of archive, what got published on "The Hindu" News paper.http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2008022850771600.htm&date=2008/02/28/&prd=seta&

Monday, March 15, 2010

பெண்மொழி / பொன்மொழி

கடவுள் இருப்பதை கூட உணரலாம்....
ஆனால்,
கேமரா இருப்பதை உணர்வது மிகவும் அரிது.

-சுவாமி நித்யானந்தா

Sunday, March 29, 2009

சேர்ந்த பின் அழிக்க படும் 

மீண்டும்

தமிழ் மனம் சேர்க்கைக்காக 
தமிழ் மனம் சேர்க்கைக்காக 

Sunday, November 2, 2008

வறுமை கவிதை.. 


எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தேன்,
நிறைய சட்டைகள்,

என் சட்டையை பார்த்தேன்,
நிறைய ஜன்னல்கள்